பக்கம்:கண்ணன் கருணை.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 செய்யும் தொழிலே உன்னைத் தொழில் படுத்தும் பத்தியமில்லாத வைத்தியம் பலிக்காது சத்தியமில்லாத செயலும் சிறக்காது செயற்படுவதே வாழ்க்கையின் இயற்கை செயலின் பயனைத் துறப்பதே தியாகம் புகழ்கருதி நன்மை செய்வார் வணிகராவார் தன்னல மறுப்பு தியாகத்தின் அடித்தளம் உலக நடப்பில் உன் செயல் தொடரட்டும் நல்லது தீயதென்ற பேதம் உனக்கில்லை. உன் மனதை என தாக்கிக் கொடு உன்னில் நானிருப்பேன் என்னில் நீயிருப்பாய் காணுகின்ற பொருளில் எல்லாம் தெரிவேன். காண்டியன் "எங்கும் எதிலும் தெரிகின்ற உனக்கு தனித் தனியே கோயில்கள் எதற்கு?" கண்ணன் 'நினைப்பவர் மனத்திலும் பெரிய கோயில் இல்லை ஒப்புகின்றேன் ஆயினும் உரைக்கின்றேன் கடல் நீரில் உப்பு கரைந்திருக்கின்றது உப்பும் நீரும் உணவுக்குத் தேவை - ஆயினும் அப்படியே பயன்படுத்துவதில்லை கதிரவன் வெப்பத்தால் கடல்நீரைக் காய்ச்சி உப்பைத் தனியே உலர்த்தி எடுத்தே உணவில் சேர்த்துக் கொள்ளப் படுகின்றது. அதன் படிக்கே எங்கும் நிறைந்த இறைவனே வழிபட, தனியிடம் வகுத்துக் கொண்டார் அதுவே கோயில் ஆன்மா லயப்படும் லாயம் என்பார் ஆலயம் அறிக.