பக்கம்:கண்ணன் கருணை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 கான்டீபன் உருவுகள் பலவாயினும் நீ ஒருவனே! உறவுகள் பலவாயினும் நானும் ஒருவனே உரிமையோ தனி வேறு ஆகின்றது அறிகின்றேன். உறவு முறையில் புரியாத முரண்பாடு ஏனோ அப்பனுடன் பிறந்தபெண் அத்தை ஆவாள் அப்பனுடன் பிறந்தவனே சித்தப்பன் என்பார் சித்தப்பன் மகள் எனக்கு தங்கை அத்தை மகளோ தாரம் ஆகின்றாள் அண்ணன் மகள் எனக்கும் மகளே அக்காள் மகள் மனையாள் ஆவதென்ன? உறவுமுறனே உணர்வு முறனே ? என வினவினான் பார்த்தான், வியந்தான் கண்ணன் கண்ணன் முன்னோர் வகுத்த கணக்கைத் தொகுத்துப்பார் வித்து முளைத்து வேர் கொள்ள நிலம்வேண்டும் மண்ணின் வளத்துக்கே பயிரும் தழைக்கும் ஒரு நிலத்தில் வித்திட்டு மறுநிலத்தில் நடுவார் வித்து நாற்றான மண்ணில் நடப்படுவதில்லை அத்தை உன் ரத்தம் வித்திட்ட மாமன் வேறு சித்தப்பன் உன்ரத்தம் வித்தும் உன்னினம் அக்காள் உன்ரத்தம் அவள் கணவன் வேறுவழி அண்ணன் உன்ரத்தம் அவள் வித்து உன்வழி ஓரின வித்தின் உறவு தவிர்க்கவே கொண்டு கொடுக்க வரன்முறை வகுத்தனர் கோத்திர முறை யென்று குறித்தனர் மேலோர் .ஆயிரம் கூறினேன் அறிவு தெளிந்திலையோ அறியாமை பேரிருளில் தடுமாறும் அந்தகனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/19&oldid=1355972" இலிருந்து மீள்விக்கப்பட்டது