பக்கம்:கண்ணன் கருணை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 சாத்திரம் என்பது நாத்திறம் அல்ல முன்னோர் கண்ட அனுபவ முன்னுரை பின்னேர் தொடர வகுத்த நல்வழி என் வழியன்றி உனக்கென்று தனி வழியில்லை கண்ணன் சொன்னேன் காண்டீபத்தை எடடா உடல் அழியும் நினைவின்றி யோகி ஆகி உட் சோதியில் கலந்து நிற்கின்றான் பீஷ்மன் அறப் போருக்கு தனை மறந்து நிற்கின்றான் தருமன் நன்றிக் கடனுக்கு கர்ணன் தான் செய்த புண்ணியத்தை முன் வைத்து போர் கேட்கின்றான் பொறுமையின் எல்லையில் புழுங்கியது போதுமடா தருமம் அழியும் இடம்தோறும் தலம் தோறும் காலக் கணக்கின்றி ஞாலம் காக்க வந்தேன் வருகின்றேன் வந்துகொண்டே இருப்பேன் விஜயனே அர்ச்சுனா வில்லினை எடடா வீரம் பெரிதென்று நாண்கள் அதிரட்டும் வெற்றி வெற்றி என்றுன் சங்கு முழங்கட்டும் அரவக் கொடியோன் படையுடன் மாளட்டும் அறத்தின் திருமகனுக்கு மணிமுடி சூட்டுவோம் உறுதி சொன்னான் கண்ணன் உணர்வின் உச்சத்தில் தனை மறந்து நின்றான் தனஞ்செயன் துயரத்தின் எல்லையிலே துடித்திருந்த கிழவன் கண்ணிழந்தவன் ஆயினும் கருத்துடன் கேட்கின்றான் திருதன் எழுந்த அலைகள் எழுந்தபடி நின்றதோ பாய்ந்த வேங்கை பாய்ச்சலை மறந்ததோ களத்தில் படைகள் அணிவகுத்த பின்னே காலம் கடப்பதென்ன காரணமோ சஞ்சயனே என் சஞ்சலம் தீர வழி என்ன:"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/25&oldid=1363416" இலிருந்து மீள்விக்கப்பட்டது