பக்கம்:கண்ணன் கருணை.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 நீள் புவியும் மக்களையும் காக்க வேண்டிலேன் பரம் பொருளே உன்னைப்பார்த்த கண்களால் பாவம் நிறைந்த இந்த உலகை பார்த்துக் கொண்டிருக்க மனம் ஒப்பவில்லை கொடுத்த கண்களை பறித்துக்கொள் என்றேன் கும்பிட்டேன் குருடானேன் நீ எனக்குக் கோலாணுய் நான் பெற்ற பிள்ளைகள் என் சொல்லை முறித்தனர் நல்லதம்பி விதுரன் வில்லை முறித்தான் விதியும் நம்மைச் சிரித்து நடைபோடுகின்றது என்று உருகிய வேந்நனை ஆற்றினுன் சஞ்சயன் தெரிந்தும் தெரியாத மனத்தோடு விஜயன் கண்ணன் கருணைக்கு முன் கட்டுண்டு நின்ருன் வீரம் உறங்கிற்ருே வில்லும் வெற்றிரும்பு ஆனதோ இடதுகை வீரனுக்கு இரங்கின்ை இறைமகன் கண்ணன் சொல்லுகின்றேன் சுக துக்கம் புறத்திருந்து வருவன ஆன்மாவைத் தொடுவதில்லை உறுத்துவது மனத்தளவே குளிரும் வெப்பமும் பூதப் பொருள் தருவன தாக்குவது உடலளவே ஆன்மாவுக்குச் சேதமில்லை திரிகின்ற புலன்களை அடங்க வைத் தியானத்துக்கு வருவாய் தெளிவு பெறுவாய் ஏது பிழையாயினும் மன்னிப்புண்டு மனதறிந்த தவறுக்கு மாற்றமில்லை தானதருமம் அதர்மத்துக்கு திரையுமல்ல புகழுக்காக கொடுப்பது அறமுமல்ல ஞானத்தால் அஞ்ஞானத்தை வென்று மன மடங்குவதே மாபெரும் யோகமாகும் பக்தியில் சிறந்து ஞானத்தில் தெளிந்து