பக்கம்:கண்ணன் கருணை.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிள்ளையார் சுழி ஓங்காரக் கையனே வெண்பிறைக் கொம்பா நீலக் கடலில் நீந்தி எழுந்து மூலக் கனலில் மூண்ட கொழுந்தே பாரதிக் கினிய பாண்டித் துரையே நான் மணி மாலை சூடிய நாயகமே மணக்குள விநாயகா என்மனத்துள நாயகா முனி அரையன் மாபாரதம் முடிபோட்டுச் சொல்ல பனிவரையில் தன்கொம்பெடுத்து வரைந்த தம்பிரானே ஆலடி அரசடி ஆற்றடி கிணற்றடி ஊரடி தோறும் உறவாடும் பிள்ளாய் தாய்க்கு மூத்தவனே தந்தைக்கு முன்னவனே தம்பிக்கும் இளைய தும்பிக்கை ஐயனே நின்திருத்தாள் போற்றி போற்றி ப்ோற்றி.