பக்கம்:கண்ணன் கருணை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 காண்டிபன் கண்ணனைக் கண்டேன் காலத்தை வென்றேன் அண்ணலைக் கண்டேன் அனைத்தும் ஆனேன் மாயவனைக் கண்டேன் மாயையைக் கடந்தேன் பரம் பொருளைக்கண்டேன் பரத்தில் கலந்தேன் திருவருளே பெருங்கருணைக்கடலே நாரணு இனியானென்று இல்லை நினது நிழலானேன் என் விதியும் வேதமும் நீயன்றி வேறில்லை பிறவிக்குப் பெரும்பயன் நின்பெரிய திருமேனியை கண்டதற்கு மேலாக சொர்க்கம் ஒன்றுண்டோ சுகதுக்க மரணம் இனி எனைத் தீண்டுமோ உட் சோதியிற் கலந்தேன் ஓம் ஓம் காரணு போதும் இந்த பெரிய திருக்கோலம் உலகத்து உயிரனைத்தும் நடுங்கக் காணுகிறேன் பேர்ர்ப்படைகள் உன்னுள் ஒடுங்க காணுகிறேன் "கண் ணு கார்வண்ணு கமலக் கண்ணு மனித வடிவத்துக்கு மாலே வருக சங்கு சக்கரம் தரித்த தாமோதரா கோவிந்த கோபால அச்சுதனுக வருக" வேண்டினன் விழுந்தான் எழுந்தான் வணங்கின்ை பரம் பொருளும் பார்த்தசாரதி ஆன்ை பாஞ்ச சன்யம் பஞ்சவருக்காக முழங்கிற்று விஜயன் வில்லேந்தின்ை வீரர் ஆரவாரித்தனர்