பக்கம்:கண்ணன் கருணை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஓம்
கண்ணன் கருணை


பாரதம் என்று இந்நாடு பெயர் பெற
பார் அதம் ஆவதற்கு ஆன முன்னுரை
பாண்டவர் கவுரவர் பகைத்து நின்றபோது
பார்த்தனுக்குக் களத்திலே கண்ணன் சொன்னான்

கீதை என்னும் ஞானச் செல்வம்
துறவில் பெரிய சங்கரன் பொருள்விரித்தான்
ஞான விளக்கேற்றி ராமானுசன் தேடினான்
மாத்துவரும் யோகரகசியத்தை அலசினார்

சொல்லில் வல்ல பாரதியும் சொன்னான்
வங்கத்து மகரிஷி பரமஹம்சர்
அரவிந்தர் ராஜாஜி அறிஞர் பலரும்
ஆராய்ந்து எழுதி எழுதிச் சென்றார்

மேலோர்கள் உரைத்தது மெத்த படித்தவர்க்கே
புதிய பரம்பரை புரிந்துகொள்ள
பகவத் கீதைக்கு ஒருவழித்தடமாக
இளந்தமிழில் ஏ கே வேலன் எழுதுகின்றான்.

தேவனின் வாக்கைத் தெரிந்து கொண்டபடிக்கு
ஏதும் பிழையிருந்தால் அதுஎன் பொறுப்பு
ஓரளவு தெளிவிருந்தால் கண்ணன் கருணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/6&oldid=1241470" இலிருந்து மீள்விக்கப்பட்டது