பக்கம்:கண்ணன் கருணை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6



கிருஸ்துவின் இயக்கத்துக்கு வேதம் பைபிள்
இஸ்லாம் மார்க்கத்துக்கு சாஸ்த்திரம் குர்-ஆன்
புத்தக் கோட்பாட்டுக்கு விளக்கம் தம்மபதம்
இந்து சமயத்துக்கு வேதங்கள் நான்கு

ருக்கு யஜுர் சாமம் அதர்வனம்
இந்த வேதங்களுக்கு விளக்கம் உபநிடதங்கள்
உபநிடத சாரமே பகவத் கீதை

பாரதத்தை ஐந்தாம் வேதம் என்பார்
படுகளத்தில் பொருதழிந்த குருகுலத்தின் கதை
கீதை இடம் பெற்றதால் வேதமானது

சூதாடி நாடிழந்த பாண்டு மக்களுக்கு
இருக்க வீடும் கொடுக்க மறுத்த
துரியனை மகனாகப் பெற்ற பிழைக்கு
மன்னர் மன்னன் திருதன் வருந்தினான்

கிழவனுக்கு களஞ்செல்ல வழியில்லை விழியில்லை
வேதத்தை வகுத்துரைத்த வியாசன் திருவருளால்
களத்துச் செய்திகளை கண்டுரைத்தான் சஞ்சயன்

தெய்வத் திருவருளை ஒருபுறம் நிறுத்தி
மானிட வல்லமையை மறுபுறம் மோதவிட்டு
உண்மைக்கு விளக்கம் தந்த சரித்திரம்

வாழ்க்கை சிலருக்கு விளையாட்டு ஆர்ப்பாட்டம்
வேறு சிலருக்கு சூதாட்டம் போராட்டம்
மற்றும் சிலருக்கு தண்டனை பெருஞ்சுமை

இந்த வேதனைகளுக்கு ஒரு அறை கூவல்
தர்மத்தின் குரல் சத்தியத் சுவடு
யோக விளக்கம் ஞான மார்க்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/7&oldid=1241473" இலிருந்து மீள்விக்கப்பட்டது