பக்கம்:கண்ணன் கருணை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7



போர்மறுத்த வில்லின் புலவனை முன்வைத்து
கார்வண்ணன் சொல்லாமல் சொன்ன போதனை
பக்திச் செல்வம்——இது பகவத் கீதை

நாயகன் அணிவகுக்க ரதவரிசைகள் தொடர
குதிரைகளின் குளம்படிக்கு காது செவிடு பட
மறவர்களின் வேலும் வாளும் சரசரக்க
பார் மகள் உடல் நெளிய போர்மகள் புறப்பட்டாள்
தர்மஷேத்திரம் போர்களம் ஆனது.
சரித்திரம் குருக்ஷேத்திரம் என்று சொல்லும்
கண்ண பெருமான் காண்டீபனுக்குத் தேரோட்டினான்

அமைக்கொடி ஆடும் ரதத்தில்
அர்ச்சுனன் களத்துக்கு வந்தான்
பகைவரிசை ஆனாலும் அந்தப் படைவரிசையில்
பாசம் மிகுந்த பாட்டன் இருந்தான்
பக்திக்குரிய ஆசான்கள் இருந்தனர்
பந்துக்களே சாவின் தலைவாசலில் நின்றனர்
வீரத்தைப் பயிராக்கி வெற்றியை அறுத்தெடுக்க
நிலம் சிவக்கப் போவதை உணர்ந்தான்.

களத்திலே எழுகின்ற போர் முழக்கம்
மனைதோறும் அழுகுரலாய் மூளாதோ
யாகத்தீ வளர்த்து தேவரைத் தொழுதவர்
இடுகாட்டுத் தீயிடையே நடை போடுவதோ
அன்பிருந்த நெஞ்சம் ஆறாத புண்ணாக
வேல்கொண்டு எழுதுவதோ வீரர் சரித்திரம்
பெற்ற மகன் சுடலையில் எரிகின்ற போது
பெற்ற வயிறுகள் பற்றி எரியாதோ

மழலைச் செல்வங்களுக்குத் தகப்பன்மார்
சொக்கத்தில் என்ற சொல்லும் சுடாதோ
உயிர்களைப் பறித்து ஊர்களை எரித்து
நாடு சுடுகாடு ஆன பின்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/8&oldid=1241480" இலிருந்து மீள்விக்கப்பட்டது