பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 Q Trré விழைந்தாள். பார்வதியை நோக்கித் தன் கருத்தை வெளியிட்டாள். அவளுடைய பருவலிழைவை அறிந்து அவளைப் பார்த்து "உன் விருப்பம் நிறைவேறும். வைகாசி மாதம் சுக்கில பகடித் துவாதசியில் கனவில் எவன் உன்னோடு கலந்து மகிழ்வானோ அவனே உனக்குக் கணவன் ஆவான்" என்று பார்வதி தேவி கூறி அருளினாள். அவ்வாறே அவள் அந்த நாளில் தன் கனவில் ஒரு இளைஞனோடு காதற்கலவி அடைந்தாள். அக்கனவினைக் கண்டதுமுதல் அதே நினைவில் வாழ்ந்து கொண்டிருந் தாள். நிஜ வாழ்வில் ஏற்பட்ட அனுபவமாகவே அவளுக்கு இருந்தது. அவனை எப்படிக் காண்போம்? எப்பொழுது காண்போம்? என்ற அதே ஏக்கத்தில் இளைத்துக் கொண்டே வந்தாள். சித்திரலேகை என்ற தோழி அவள் உறக்கத்திலும் நினைவிலும் யாரையோ நினைத்துக்கொண்டு அவதிப்படு கிறாள் என்பதை அறிந்து அவளை விசாரித்தாள். அவள் பார்வதி தேவி தனக்கு உரைத்ததையும் தன் கனவினையும் சொல்லி, அவனை எப்படி அடைவது? எப்பொழுது அடைவது? என்று கேட்டு, வழி யாது? என்ன? என்று அவளைத் துருவினாள். - அநிருத்தனை அவள் சுட்டிக் காட்டினாள். அவன் கண்ணனின் பெயரன்; பிரத்தியும்னன் மகன் என்பதைத் தெரிவித்து அவனைத் தேடிக் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றாள்.