பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇99



பிறகு சித்திரலேகை தன்னுடைய மோக வித்தையின் மகிமையினால் துவாரகைக்குச் சென்று அதிருத்தனைக் கட்டிலோடு கடத்திக்கொண்டு வந்து உஷையின் படுக்கையில் கிடத்தினாள். வாணாகுரனோடு போர் அவள் தான் விரும்பியவகையில் எல்லாம் அவனோடு இன்பம் துய்த்தாள்; நாள்கள் சில சென்றன. காவலர், அவர்கள் கள்ள உறவினை அறிந்து நாட்டின் தலைவனாகிய வாணாசூரனிடம் தெரிவித்தனர். அவள் தந்தையால் அந்நியன் ஒருவன் அந்தப்புரத்தில் நுழைந்து கன்னியுடன் காதல் செய்வதைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. அவனைக் கட்டிப்பிடித்து வர ஆள்களை ஏவினான். அநிருத்தன் அங்கிருந்த உருண்டையான கட்டை ஒன்றனை எடுத்துக்கொண்டு வந்த வீரர்களைத் தாக்கினான்; வாணாசூரனால் இவன்முன் நிற்க இயல வில்லை. பின்பு தன் மாயவித்தையால் அவனைக் கட்டு வித்துச் சிறையில் இட்டான். அநிருத்தன் இருக்கும் இடம் தெரியாமல் கண்ணனும், மற்றவர்களும் கவலை அடைந்தனர். மாதங்கள் நான்கு கடந்துவிட்டன. நாரதர் வந்து நடந்த கதையைச் சொல்லி, அவன் வாணாசூரனால் சிறைப் பட்டதை விவரித்தார். துவாரகையிலிருந்து படைகளும், கண்ணனும், பலராமனும், பிரத்தியும்னனும், மற்றுமுள்ள வீரர்களும்,