பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102◇ ராசீ



அவனுக்குத் துணைவனாய் இருந்த காசிராஜன் கண்ணனை எதிர்த்தான். அவன் தலையை அரிந்து அது காசியில் விழச் செய்து, கண்ணன் துவாரகைக்குத் திரும்பி வந்தான். அத் தலையைக் கண்டு இது துவாரகைக் கண்ணன் செயல் என்று அறிந்து அவன் மகன், சிவனை வேண்டி அவர் சொன்ன அறிவுரையின்படி யாகம் ஒன்று இயற்றி, ஒரு பூதத்தைத் தோற்றுவித்தான்; அதை ஏவிவிட்டுக் கண்ணனை அழித்துவிடும்படி கூறினான். அது வேகமாகத் துவாரகைச் சென்று கண்ணனை அணுகியது. கண்ணன் அப்பொழுது தாயம் ஆடிப் பொழுது போக்கிக் கொண்டு இருந்தான்.

தன்னிடமிருந்த சக்கரத்தை அனுப்பிக் கண்ணன் அதனை அழிக்குமாறு கட்டளையிட்டான். அது அந்தப் பூதத்தைத் துரத்திச் சென்றது. பூதம் புறப்பட்ட இடத்திற்கே சென்று ஏவியவனையே கொன்றுவிட்டது. காசி நகரத்தையும், அந்தப் பூதத்திற்குத் துணையாய் வந்த கூட்டத்தையும், அந்தப் பூதத்தையும் அந்தச் சக்கரம் எரித்துச் சாம்பலாக்கியது.

பலராமன் சாம்பனை மீட்டது

அத்தினாபுரியில் துரியனின் மகள் இலட்சுமணை பேரழகும் நற்பண்பும் நிறைந்தவளாய் இருந்தாள்: அவளுக்குத் திருமணம் நிகழ்த்த வேண்டிச் சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தனர். பல தேசத்து அரசர்களும் இளைஞர்களும் வந்திருந்தனர்.

சம்பவதியின் மகனான சாம்பன் மிகவும் துடுக்கத் தனம் மிக்கவன்; தாய் வளர்ப்புச் செல்வ மகன்; மிகவும்