பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇105



"இந்த அத்தினாபுரத்தையே அழித்துவிடுகிறேன்" என்று ஆரவாரித்துக் கொண்டு தன் கலப்பையால் தரையைத் தாக்க அந்த நகரமே அதிர்ந்தது. நகரத்துப் பெருந்தூண் ஒன்றைச் சாய்க்க அந்த நகரமே ஒரு பக்கமாகச் சாயத் தொடங்கியது.

தெய்வ சக்தி நிரம்பிய வலிமை மிக்க பலராமனின் சீற்றத்தின்முன் அவர்களால் நிற்க முடியவில்லை. தாம் தனிமனிதன் ஒருவன் செய்த தவற்றுக்காக ஒர் இனத்தையே தாக்கித் தரக் குறைவாகப் பேசியது தவறு என்பதை உணர்ந்தனர். சாம்பனைக் கண்டிக்கபோய் வீண் வம்பில் அகப்பட்டுக் கொண்டோமே என்று வேதனைப்பட்டனர்; தம் வருத்தத்தைத் தெரிவித்து மன்னிக்குமாறு வேண்டினர்.

துரியன் தன்மகள் வாழ்க்கையைப் பாழ்படுத்த விரும்பவில்லை. தொட்டவனே அவளை மணக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால் அவர்களும் சினம் ஆறி மனம் மாறி அடங்கி அழகாக அவர்களுக்கு அனைவரும் முன்னிருந்து மணம் முடித்து பலராமனோடு துவாரகைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணனின் பெயரன் என்பதால் அவளும் மனம் இழைந்து அவனோடு வாழ்க்கைத் துணைவி ஆதற்கு இசைந்தாள். முரடனாக இருந்தாலும் அவன் வீரன் என்பதை இந்த எதிர்ப்பில் கண்டனர். மகாவீரன் என்பதால் அவளை மணக்க அவனுக்குத் தகுதி உண்டு என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். அவளும் தன்னை மணப்பவன் ஒரு மாவீரன் என்பதால் மன நிறைவு கொண்டாள்.

துவிதனின் எதிர்ப்பு

நரகாசுரன் மறைந்ததை எண்ணி, அவன் நண்பர்களில் ஒருவனாகிய துவிதன் என்பவன் பலராம