பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇107



விட்டான். உடனே அவன் மிகவும் சினந்து தம் கை முஷ்டியினால் அக்குரங்கன் தலையில் அடிக்க, அவன் துடித்து உயிர்நீத்தான்.

சராசந்தன் வதம்

அரக்கு மாளிகையினின்று தப்பிச் சென்று வெளியேறிய பாண்டவர்கள் திரெளபதியை மணந்தபோது வெளிப்பட்டனர்; பின்பு நடைபெற்றவை; அக்கினிக்கடவுளிடமிருந்து அர்ச்சுனன் காண்டீபம் என்னும்வில்லினைப் பெற்றான்; அதிலிருந்து தப்பித்துச் சென்ற மயன்என்பவனைக்கொண்டுஇந்திரப்பிரத்தம் என்னும் நகரை நிர்மாணித்து அங்கே இருந்து அவர்கள் இராச சூயயாகம் நடத்த ஏற்பாடு செய்தனர். அதில் கலந்து கொள்ளக் கண்ணன் இந்திரப்பிரத்த நகர் வந்தான்.

சராசந்தன் இருக்கும்வரை கண்ணனுக்கு எப்பொழுதும் தொல்லைகள் இருந்து கொண்டு வந்தன; பாண்டவர்களும் அமைதியாக வாழ முடியாது; அதனால் அவனைக் கொன்று முடிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அவனைக் கொல்லத் தக்க ஆற்றல் வீமன் ஒருவனிடம்தான் இருந்தது; அதனால், இந்திரப்பிரத்தம் சென்ற பிறகு முதல் வேலையாகச் சராசந்தனைக் கொல்ல முயற்சிகள் எடுத்துக் கொண்டான்.

அவனைச் சந்திப்பது என்றால் பிராமணர்களாய்ச் சென்றால்தான் முடியும் என்று தீர்மானித்தான். மற்றவர்கள் காவல் கடந்து உள்ளே செல்ல இயலாமல் இருந்தது. அதனால், அந்தணர் வடிவு கொண்டு கண்ணனும், வீமனும், (பீமன்) அர்ச்சுனனும் அவன்