பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 ராசீ ___________________________________________

நூறு பிழை செய்யும்வரை கண்ணன் பொறுமை காட்டினான். இப்படியே அவன் அடுக்கிக் கொண்டு போனால் மற்றவர்கள் எதிர்க்க நேரும்; அரசர்களுக்குள் வீண்மோதல்கள் நிகழும்; கட்சிகள் ஏற்படும்; குழப்பங்கள் நேரும். அதனால், தானே எழுந்து அவனை இழுத்து வந்து தன் சக்கரத்தை ஏவி அவன் சிரசைத் தனிப்படுத்தினான். கண்ணன்முன் பச்சைக் குழந்தையாய் அவன் நடந்து கொண்டான். சாது மருண்டால் காடு கொள்ளாது என்ற நிலைமை அங்கு உருவாயிற்று, கண்ணனுக்கு எதிர்ப்பாய் யாரும் தொடர்ந்து முணுமுணுக்கவும் இல்லை. கண்ணன் முதற்பூசை பெற வேள்வியும் இனிது நடைபெற்றது.

அந்த வேள்வியில் அவர்கள் கட்டிய மண்டபம் கண்டு அரசர் மகிழ்ந்தனர். துரியன் கல்லுக்கும், நீருக்கும் வேறுபாடு அறியாமல் தடுக்கி விழுந்தான். அதனைக் கண்டு திரெளபதி நகைத்தாள். அஃது அவனுக்குப் பகையை உண்டாக்கியது. அவர்கள் செல்வத்தையும், செழிப்பையும் கண்டு பொறாமை கொண்டான்.

அவர்களைத் தம் அரண்மனைக்கு அழைத்துச் சூதாட வைத்து அவர்களின் நாட்டைக் கவர்ந்து கொண்டு காட்டில் வாழச் செய்தான். தொடர்ந்து அவர்களுக்குத் துன்பம் விளைவித்தான்.

அருச்சுனன் சுபத்திரை திருமணம்

இராச சூய யாக வேள்வி நடத்துதற்குமுன் அருச்சுனன் தீர்த்த யாத்திரை செல்ல நேரிட்டது. தருமனும் திரெளபதியும் சோலையில் இனிது அமர்ந்து உரையாடச்