பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇113



சென்றிருந்தபோது வில்லும் அம்பும் எடுப்பதற்காக அருச்சுனன் வீட்டுக்குள் நுழைந்தான்; இருவரும் தனிமையில் இருந்தபோது அவன் அவர்களைப் பார்த்ததால் அந்தப் பாவம் தீர அவன் தீர்த்த யாத்திரை சென்றான்.

அப்பொழுது அவன் தலயாத்திரையில் தெய்வக் கோயில்களை வணங்கியதோடு நங்கையர் சிலரைக் காதலித்து மணம் செய்துகொண்டான். உலூபி என்ற நாகக் கன்னியையும், மதுரையில் பாண்டியன் மகள் சித்திராங் கதையையும் மணந்து பின் வீடு திரும்புகையில் சுபத்திரையை மணந்து கொண்டான்.

சுபத்திரை தேவகியின் மகள்; கண்ணனின் தங்கை; அவள் இருந்த துவாரகைக்குத் துறவி கோலத்தில் யோகீசு வரன் போல் அருச்சுனன் வந்தான்.

மடத்தை இடமாகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். ஒரு சக்தி வாய்ந்த யோகி என்று பலரும் வந்து வணங்கிச் சென்றனர். விபூதியும் குங்குமமும் பெற்றுச் சென்றனர். பலராமனும் அவனை ஒரு சந்தியாசி என்று நம்பி அவனை வழிபட்டுக் குங்குமமும் விபூதியும் வாங்கிச் சென்றான்.

கண்ணன், வந்தவன் யார் என்பதை அறிந்தவன், அதனால், தன் தங்கையிடம் "இங்கே இவரைக் கவனித்துக் கொள்ளவும்; இவருக்கு வேலை செய்யவும்" என்று விட்டு வைத்தான்.