பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114◇ ராசீ



அர்ச்சுனனை யார் என்று இவள் அறிந்து கொண்டாள். இருவரும் காதலை வளர்த்துக் கொண்டனர். பலராமன் சிவனை வழிபட வெளியே சென்றிருந்த சமயம் சுபத்திரையே தேர் ஒட்டிக்கொண்டு அர்ச்சுனனோடு உடன் போக்கு மேற்கொண்டாள்.

பலராமன் எதிர்க்க வந்தான். கண்ணன் கேட்டுக் கொண்டான்; அவள் அவனைக் காதலித்து மணம் செய்து கொள்கிறாள் என்று விளக்கம் சொன்னான். கண்ணன் தங்கைக்குத் தன் வாழ்த்தினையும், சீர்களையும் அனுப்பினான்.

துவாரகையில் கண்ணனுக்கு எதிர்ப்புகள்

பாண்டவர்களுக்குத் துது செல்லக் கண்ணன் அத்தினாபுரம் சென்றிருந்தான். இதுதான் சமயம் என்று சிசு பாலனின் நண்பனான சாலுவன் சிவனை நோக்கித் தவம் செய்து வரங்கள் பெற்று வலிமை பெற்றவனாய் விளங்கினான். மயன் என்னும் அசுரத் தச்சனைக் கொண்டு போர் விமானம் ஒன்றனைப் படைத்துக்கொண்டான்: அஃது எங்கு இறக்கினாலும் அப்பகுதி நாசமாயிற்று: அதனைத் துணையாய்க் கொண்டு படைகளையும் அனுப்பி மதுரா நகருக்கு நாசம் விளைவித்தான். அவனை எதிர்த்து யாதவ வீரர்களான பிரதியும்னன் சாம்பன் முதலியவர்கள் தம் வலிமை கொண்டு போராடினர்;

சிசுபாலனைக் கொன்றதால் அவன் நண்பனான சாலுவன் வந்து முற்றுகை இடுவான் என்று சந்தேகப்பட்டுக் கண்ணன் துவாரகைக்கு விரைந்தான். பலராமனும் உடன் வந்தான். பலராமனைத் துவாரகையைக் காக்கும்படி