பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇117



  "அவல்!” ஒருபிடி வாங்கி வாயில் போட்டுக்

கொண்டான்.

  "இன்னொரு பிடி" என்றான். அவன் கையை உருக்கு மணி தடுத்துப் பிடித்துக் கொண்டாள்.
  "வேண்டாம் இது போதும்; உடம்புக்கு ஆகாது” என்றாள்.
  அந்த ஒருபிடி அவலுக்கே அவன் வறுமை நீங்கி விட்டது; குவிந்த செல்வம் அடுத்த தலைமுறைக்கும் போதும் என்று கூறும் அளவிற்கு நிறைந்துவிட்டது.
  வாய்திறந்து இது வேண்டும் என்று சுதாமன் கேட்கவே இல்லை. 
  வீடு திரும்பியதும் வறுமை தன் சரித்திரத்தை முடித்துக் கொண்டது. மனைவி பூரித்து விட்டாள்; அடையாளமே தெரியவில்லை; சிறுவர் எல்லாரும் புதிய உடைகள் அணிந்து கொண்டு மகிழ்ச்சியோடு காணப் பட்டனர். எல்லாம் கண்ணன் அருள் என அறிந்து அவன் நினைவில் வாழ்ந்தனர்.

பாரதப் போரில் கண்ணன்

  துரியனின் அவையில் திரெளபதி அழுது அரற்றிய போது துகில் தந்து அவள் மானத்தைக் காத்தான்; காட்டில் வாழ்ந்தபோது அவ்வப்பொழுது தக்க நேரத்தில் சென்று உதவினான். நாட்டைத் திரும்பக் கேட்கக் கண்ணன் தூது சென்றான்; அங்கே கண்ணனைக் கொல்லத் துரியன் சூழ்ச்சி செய்திருந்தான். அவன் இருந்த ஆசனத்தின்கீழ் குழி தோண்டி அங்கு மல்வீரர்களை வைத்திருந்தான். கண்ணன்