பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10◇ ராசீ



பிறக்க ஆணையிட்டார்; திருமால் கண்ணன் ஆனார்; ஆதிசேடன் இவன் அண்ணன் பலராமனாய்ப் பிறந்தான்.

 நித்திரை வடிவில் தன்னோடு நீள்துயிலில் துணையாக இருந்த யோக மாயை என்ற நன்மகளைக் கோகுலத்தில் திருமகளாகப் பிறக்கக் கருத்து வைத்தார். தேவகி மைந்தன் கண்ணன்; உரோகிணி மகன் பலராமன் ஆயினான்.
 விந்திய மலைக்கு வடக்கே நந்திய நகரமாக மதுரா நகர் இருந்தது. உக்கிரசேனன் என்பவன் அக்கிரமம் அழித்து நன்னகராக்கி, அதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். தருமத்தின் தலைவன் என்று அவன் கருமத்தை வைத்து அவனைப் பாராட்டினர். நத்தையில் முத்தாய்ச் சேற்றில் செந்தாமரையாய்த் திகழ்ந்த அவ்வரசனுக்குத் தீமையில் வல்லோன் ஆகிய கம்சன் பிறந்தான்; எந்த நேரத்தில் மனம் மாறுவான் என்று சொல்ல முடியாது; உயிரைக் காத்துக் கொள்ள எந்தச் செயலையும் செய்யத் தயங்கியது இல்லை. கொடியோன் என்பதற்கு வடிவோன் என்று சொல்லும்படி எடுத்துக்காட்டாய் விளங்கினான்.
 உக்கிரன் தன் இளையவன் ஆகிய தேவகனின் மகள் தேவகி; அவளுக்கு வசுதேவனை மணமகன் ஆக்கினன்; மணம் முடிந்ததும் அவளைக் கணவனோடு அனுப்பினன். தேரில் அவர்களை இருத்திக் கம்சனே முன் அமர்ந்து, அதனைச் செலுத்தினான். விண்ணில் அசரீரி மற்றுச் சாரமுள்ள செய்தியைச் செப்பியது. "தேரா மன்னா! செப்புவது உடையேன், ஒராது அவளைத் தேரில் ஏற்றி அழைத்துச் செல்கிறாய்; அவள் பகைவன் பாசறை; உனக்கு அவள் எட்டாம் மகன் ஒரு கல்லறை; உன் உயிரைக் கவ்வும் எமன்" என்று அறிவித்தது.
 அமுதம் பிறந்த ஆழியில் நஞ்சு தலை காட்டியது. அன்பு மிக்க அவன் நெஞ்சினை வன்பு தாக்கியது; பாசம்