பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 о упё குழியில் விழுந்ததும் அம் மல்லர்களை அழித்து மேல் எழுந்தான். விதுரன் வீட்டில் தங்கி இருந்து துரியனையும் விதுரனையும் பிரித்து வைத்தான். அசுவத்தாமனைத் தலைமை தாங்காமல் துரியோதனன் சந்தேகம் கொள்ளும் படி செய்தான்; குந்திக்குக் கன்னன் தன் மகன் என்பதை உணர்த்தி அவளை அவனிடம் அனுப்பி வரங்களைக் கேட்கச் செய்தான். நாக அத்திரத்தை இரண்டாம் முறை ஏவுவது இல்லை என்றும், அர்ச்சுனனைத் தவிர மற்றைய நால்வரைக் கொல்வது இல்லை என்றும் உறுதிகள் கேட்டுப் பெறச் செய்தான்; இந்திரனை விட்டுக் கன்னனின் கவச குண்டலங்களைப் பெறச் செய்தான். அருச்சுனனுக்குச் சாரதியாகத் தேர் ஒட்டினான். அவன் சோர்வு கொண்ட போது கீதையை உபதேசித்துப் பீஷ்மரைக் கொல்ல அருச்சுனனுக்கு வழி கற்றுத் தந்தான்; கிருபனைப் பாசத்தால் கொல்லப் போர்க்களத்தில் தருமனைக் கொண்டு ஒரு பொய் சொல்ல வைத்தான். சயந்தரனைக் கொல்லத் தன் சக்கரத்தால் சூரியனை மறைத்தான்; அவன்பொழுது சாய்ந்துவிட்டது என்று வெளியே தலை காட்டினான். அர்ச்சுனன் அவனைக் கொன்று முடித்தான்; கன்னன் நாகாத்திரம் விட்டபோது தேரைச் சற்றுக் கீழே அழுத்திக் குறி தப்பச் செய்தான். அபிமன்யுவின் மனைவி உத்திரை என்பவளுடைய கருவை நோக்கி அசுவத்தாமன் ஏவிய அத்திரத்தைத் தாக்குதலினின்றிக் காத்தருளினான். பாண்டவர் வமிசமே இச்செய்கையால் காக்கப்பட்டது. அசுவத்தாமன் விட்ட பிரமாத்திரத்தை அர்ச்சுனனைக் கொண்டு தடுத்து நிறுத்தினான். துரியன்