பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇125



சந்தித்தான்; அவர் திருவடிகளைத் தொழுது தன் துயரத்தை விளம்பினான். தான் இனி உயிர் வாழ்வதில் பயனில்லை என்று அலுத்துக் கூறினான்; மானம் இழந்த நிலையில் வாழாமை இனிது எனச் சொன்னான். வியாசர் அவனுக்குச் சில உண்மைகளைக் கூறி ஆறுதல் அளித்தார். "அருச்சுனா! நீ வெட்கப்படாதே; விசனமும் கொள்ளாதே; சகல பூதங்களின் காலகதி இப்படிப்பட்டதுதான். நேற்று இருந்தது இன்று மாறும்; உயிர்களும் உலகப் பொருள்களும் காலத்தினால் படைக்கப்படுகின்றன. காலமே அவற்றை அழித்து விடுகின்றது. கொடி கட்டிப் பறந்தவர்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாய் மறைந்து விடுவது படைப்பின் இயற்கை. காலத்தின் ஆதீனத்தில்தான் இந்த உலக இயக்கமே அமைந்து இருக்கிறது." "பூமியில் அநீதிகள் தோன்றும்போது நீதிமான்கள் தோன்றி அவற்றை நீக்கப் பாடுபடுகிறார்கள்; புரட்சிகள் வெடிக்கின்றன: யுகங்கள் மாறுகின்றன. தேவர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். சர்வேசுவரனான தேவன் கண்ணனாக அவதரித்தான்; தீயவர்களை ஒழித்தான்; மாபெரும் மன்னர்களை எல்லாம் மடிய வைத்தான். அவனுடைய அவதாரகாரியம் முடிவு அடைந்து விட்டது. அந்த மாபெருந் தலைவன் இனி பூமியில் நிறைவேற்றத் தக்க செயல்கள் காரியங்கள் யாதும் இல்லை. அதனால் இறைவன் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினான்." "படைக்கும் காலத்தில் படைத்தும், காக்கும் காலத்தில் காத்தும் வந்த இறைவன், அழிக்கும் காலத்தில்