பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126◇ ராசீ



அதையும் செய்து முடித்தான். நீ இப்பொழுது அவமானப் பட்டு விட்டதாகக் கருதாதே! புகழோடு நீ வாழ்ந்த காலம் ஒரு காலம்; வீடுமன், துரோணன், கன்னன் இத்தகைய மாவீரர்களை நீ ஒரு காலத்தில் சங்கரித்தாய். அப்பொழுது அவர்கள் தோற்றவர் ஆயினர்; அப்பொழுது ஏற்றம் உனக்குக் கிடைத்தது. இப்பொழுது சாமானிய நிலையில் உள்ளவர்கள் வெறும் தடி கொண்டும், தென்னை ஒடுகள் கொண்டும் உன்னை மருட்டிச் செயலற்றவன் ஆக்கினர்; அன்று நீ அடைந்த வெற்றிக்குத் துணை கண்ணன்; இவர்கள் இன்று அடைந்த வெற்றிக்கும் காரணம் அதே இறையருள்தான். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற பழமொழியை நினைத்துப்பார். இனி நீ பழைய அருச்சுனன் அல்ல. சாதாரணமானவன் ஆகிவிட்டாய், காலம் உனக்குக் கற்றுத் தந்த படிப்பினை இது; இதுதான் ஞாலத்தின் போக்கு என்பதை அறிந்து தோல்வி கண்டு துவளாமல் இரு" என்றார். "துவாரகைப் பெண்டிர் இந்த அவல நிலை அடைந்த தற்குக் காரணம் என்ன?" என்று வினாவினான். "முன் ஒரு காலத்தில் அஷ்ட வக்கிரர் என்னும் முனிவர் கழுத்து மட்டும் நீரில் முழுகிக் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். அவ்வழியில் அரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய தெய்வமாதர் அவ்வழியே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அம்முனிவரைக் கண்டு வணங்கித் துதித்தனர்." "அவர் மனம் உவந்து "உங்களுக்கு வேண்டிய வரம் யாது?" என்று கேட்டார்."