பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16◇ ராசீ



சந்தையில் சாதிக்காரர் சந்திப்பு

 எட்டாவதனை எட்டிப்பிடித்த சாதனைக்காரன் ஆன வசுதேவன், முதலாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நந்தகோபனைச் சந்திக்க விரும்பினான்; கண்ணனை விட்டுவந்த பின் சிட்டுக் குருவிபோல அவன் மனம் கண்ணனையே சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. ஊரில் பேசிக் கொண்டார்கள் கம்சன் சிறிய முளைகளைக் கிள்ளி எறிகிறான் என்று, குழந்தை அங்கு இருக்கிறான் என்ற செய்தி எட்டாமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டான் வசுதேவன்.
 "இரட்டை இலைகளை அங்குத் தழைக்க விட்டிருக்கிறோமே" என்ற கவலை அவனை அரித்தது. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ என்ற நினைப்பு அவனை வாட்டியது. ஒருவன் பலராமன்; மற்றவன் கண்ணன்
 குழந்தை பிறந்த பெருமகிழ்ச்சியில் நாட்டு அரசனுக்குக் கட்ட வேண்டிய வரித் தொகையைக் கட்டத் தாமதித்துவிட்டான். "மின்சாரக் கட்டணம் கட்டா விட்டால் அதை வெட்டி விடுவார்கள்" என்ற கவலை நமக்குத் தோன்றுவது போல் "வரித் தொகை கட்டா விட்டால் கம்சனின் அடியாட்கள் வந்து தடி கொண்டு தாக்குவார்களே" என்று அச்சப்பட்டான். அதனால் நந்தகோபன் துரிதமாக நகருக்கு ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது.
 "நந்தகோபன் நகருக்கு வந்திருக்கிறான்" என்ற செய்தி அங்குப் பார்த்தவர்கள் வசுதேவனிடம் வந்து கூறினார்கள். சந்தை கூடும் சந்திப்பில் நந்தகோபனை வசுதேவன் சந்தித்தான். மாடுகள், கன்றுகள் எப்படி இருக்கின்றன என்று விசாரித்தான். சம்பிரதாயப்படி உடம்பு எப்படி