பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16◇ ராசீ



"கண்ட இடத்தில் குழந்தையைக் கிடத்தாதே என்று சொன்னேனே கேட்டாயா" என்ற குரல் கணவன்பால் வெளிப்பட்டது.

அவனை வைத்துக்கொள்வது எளிய காரியமாய்ப் படவில்லை.

"கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்; எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்; ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்; மிடுக்கி லாமையால் நான்மெலிந்தேன் நங்காய்." என்று யசோதை அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்தாள்.

திருநாவர்தன் வீழ்ச்சி

கண்ணனை முற்றத்தில் விட்டுவிட்டுக் கோபியர் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்; சுற்றி வந்த காற்றுச் சூறாவளியாய் வீசியது. யசோதை கண்களில் தூசு பட்டு மாசு ஆக்கியது. கண்களைக் கசக்கும்போது கடுங்காற்றுக் கண்ணனை நெடு விசும்பிற்கு எடுத்துச்சென்றது.

சுழற் காற்றில் அழல் போன்ற அசுரனோடு கண்ணன் போராடிக் கொண்டிருந்தான். அசுரன் அவனை மேலே இழுக்கக் கண்ணன் அவனைத் தரைக்குள் அழுத்தினான். அசுரன் விழிகள் வெளிவந்தன; அவன் அலறிக்கொண்டு தரையில் விழுந்தான். "மலைச் சிகரம் ஒன்று நிலை குலைந்து விழுந்தது" என அசுரன் தன் உடலைக் கீழே போட்டான். அவன் பெயர் 'திருநாவர்தன்' என்று தெரிந்தது. சகடனை அடுத்து வந்த அசுரன் இவன்.

மண்ணுண்ட மாயன்

குழந்தைகள் இருவரும் தவழ்ந்து தாயாருக்கு மகிழ்ச்சியைத் தந்தனர். கால்களில் கட்டிய சதங்கையும் கிண்கிணியும் கலகலத்த ஒசையை உண்டாக்கின. "யானை