பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ( ராசீ ___________________________________________

அங்கே மேயும் கன்றுகளிடையே பேயும் நுழைந்தது என்று அசுரக் கன்று ஒன்று உள்ளே நுழைந்தது. எண்ணிப் பார்த்தால் ஒன்று மிகுதி என்பது அவர்கள் கண்ணில் பட்டது. கள்ள நோட்டுகள் உண்மை நோட்டுகளில் புகுந்து விட்டால் அதைக் கண்டு விலக்குவது அரிய செயல்; அந்தக் கள்ள நோட்டைக் கார்வண்ணனாகிய கண்ணன் கண்டு பிடித்துவிட்டான். மற்றவர்களுக்கு அவர்கள் ஆடிய இடத்தில் கோடிக்கொண்டிருந்த விளமரம்தான் கண்ணில் தெரிந்தது. அதன் பழங்களைப் பறிக்கக் கற்களை வீசிக் கொண்டிருந்தனர். ஒன்று இரண்டு விழுந்ததே யன்றி ஒட்டு மொத்தமாகத் தட்டி வீழ்த்த முடியவில்லை. கன்றின் பின்னங் கால்களைக் கைகளால் சேர்த்துக் காற்றாடி விடுவது போலச் சுழற்றி மேலே பறக்க விட்டான்; அது அந்த மரத்தின் ஒட்டு மொத்தமான கிளைகளோடு கனிகளை உதிர்த்தது.

மேலே சென்றபோது நன்றாகச் சென்ற கன்று கீழே விழும்போது வத்சவன் என்ற அசுரனாக விழுந்து மடிந்தது.

புள்ளின் வாய்க் கீண்டான்

 கன்றோடு தோழமை கொண்ட நாரை ஒன்று கொல்லுவது யாரை என்று நோக்கிக்கொண்டு இருந்தது. ஒடுமீன் ஒட உறுமின் வருமளவும் வாடி இருக்கும் கொக்கு என்பர். அதனால், அதன் பார்வை எல்லாம் கண்ணன் மீதே படிந்து இருந்தன; யமுனை நதிக்கரையில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்துகொண்டிருந்தது; வைகுந்தம் செல்வார்க்கு வாசல் திறந்து வைத்ததுபோலத் தன் வாயலகுகளைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தது.

"அரக்கன் அது, என்று தெரிந்தும் இரக்கம் சிறிதும் காட்டாமல் திறந்த கதவை மூடாதபடி பிளந்து விட்டான்; புள்ளின் (பறவை) வாயைக் கீண்டியவன் என்ற புகழ்