பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇31



மொழிக்கு உரியவன் ஆயினான். விசாரித்ததில் அந்த அரக்கன் பகன் என்று தெரிந்தது.

அகாசுரன் மரணம்

தேர்தலில் நிற்பதற்கு ஆளே கிடைக்கவில்லை; நின்றவர்கள் எல்லாரும் 'டெபாசிட்டும்' இழந்துவிட்டனர்; இனி யாரை நிறுத்துவது. முதல் நாட்போரில் தந்தை மடிந்தான்; அடுத்த நாட்போரில் கணவன் இறந்தான்; மூன்றாம் நாள் குடிக்கு ஒரே மகன் அவனைப் புற நானுற்றுத் தாய், தலையை வாரிப் புதிய ஆடை உடுத்திக் கையில் வேல் கொடுத்துப் "போய் வா மகனே" என்று அனுப்பி வைத்தாள். இது புறநானூறு தரும் இலக்கிய வினா விடை.

முதல் நாட்போரில் பூதனை உயிர் இழந்தாள். அடுத்து ஒரு நாள் பகன் நாரை வடிவில் கோரைப் புல் ஆயினான்; இனி யாரை அனுப்புவது? பேரைச் சொன்னார்கள். 'அகாசுரன்' என்று. அவன் அசகாய சூரன் என்று எடுத்த பெயர் சுருங்கி 'அகா'என்று வெட்டுப் பெயராய் அமைந்து விட்டது. இவனையே கம்சன் வெளிது உடுத்திக் கையில் வேல் கொடுத்துப் போருக்கு அனுப்பி வைத்தான். இது உருவகம். நடந்தது என்ன? அகாசூரன் மலை அரவு வடிவு எடுத்தான். அளந்து பார்த்தவர்கள் அது பன்னிரண்டு மைல் நீளம் கொண்டது என்று கூறிச் சென்றனர். இவ்வளவு பெரிய மலைப் பாம்பை எப்படி எதிர்ப்பது? ஏன் எதிர்க்க வேண்டும்? உயிரோடு வந்தால் அவனை வீரன் என்று மறவாது வழிபடுவர். அது மலைப்பாம்பு அன்று நாகப்பாம்பு என்றனர் சிலர். நாகத்தைத்தான் நங்கையர், பால் ஊற்றிப் புற்றுக்குச் சென்று வழிபடுவர். இது மலைப் பாம்பு என்று அறிந்தனர்; மலை என்றால் அதில் குகைகளும் இருக்கும். இது வாய்