பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32◇ ராசீ



திறந்த போது வழிவிட்டது போல் இருந்தது; குகைக்குள் சென்றால் புதையல் கிடைக்கும் என்று பேசினர்; உதைதான் கிடைக்கும் என்று உளறினர் சிலர். அதை என்ன செய்வது என்று எட்டி நின்று யோசித்தனர்.

தனி ஒருவன் முதலாளியை எதிர்க்க முடியாது; ஒட்டு மொத்தமாக வேலை நிறுத்தம் செய்தால் முதலாளி திக்கு முக்கு ஆட வேண்டியதுதான். அனைவரும் உள்ளே புகுவது என்று தீர்மானித்தனர். புகை வண்டிப் பெட்டிகள் மலைப் பிளவுக்குள் நுழைவதைப் போலக் கன்றுகளும், ஆயர் சிறுவர்களும் உள் நுழைந்தனர். இடமில்லை என்ற அட்டையை இன்னும் அரவோன் மாட்டவில்லை;

கண்ணன் வரும்வரை கதவு திறந்திருந்தது. சங்கத் தலைவர் மட்டும் வெளியே இருந்தார். அவர் உள்ளே நுழைந்ததும் அவரை அகப்படுத்துவது என்று காத்து இருந்தது. கையில் மந்திரக் கோல் வைத்திருப்பது போலக் கண்ணன் ஊது குழலை வைத்திருந்தான்.

இவன் என்ன மந்திரம் செய்யப் போகிறான் என்று பார்ப்பதற்காக ஏராளமான தேவர்கள் மேலிடத்தில் (விண்ணில்) கூடிவிட்டனர். நான்கு தலைகளையுடைய பிரமனும் தனக்கு ஒரு இடம் பதிவு செய்து கொண்டு ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தான். வெற்றி யாருக்கு? தொழிலாளருக்கா? முதலாளிக்கா?

கண்ணன் உள் நுழைந்தான்; கதவு மூடப்பட்டது: வாயை மூடியது அந்த மலைப்பாம்பு; வெளியே அவர்கள் வரமுடியாது. போபால் விஷ வாயுவால் தாக்கப்பட்டுச் செத்தவர்கள் போல உள்ளே காற்று இல்லாமல் சாக வேண்டுவதுதான்.

ஒரு வெடி வெடித்தது: அந்தப் பாம்பின் தலையில் ஒரு வழி வகுத்தான்; புதிய பாதையைக் கண்ணன்