பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34◇ ராசீ



போல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். "கவலைப்படாதே வீடு வந்து சேர்வர்" என்றான் கண்ணன். வீடு போய்ச் சேர்வதற்குள் தம் தோழர்களும் கன்றுகளும் முன்னே செல்வதைப் பலராமன் பார்த்தான்.

"எப்படிப் போனார்கள்?" என்று கேட்டான்.

"வழி தெரியும்" என்றான் கண்ணன். நேரம் சிறிது கழித்து வந்தமையால், இவர்கள் வருகையை ஊரவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ஏன் இவ்வளவு நேரம்?" என்று கேட்டனர்.

"மேய்ச்சலுக்குச் சற்று உள்ளே சென்று விட்டோம்" என்று கூறினார். இந்தப் பதில் அவர்கள் உளைச்சலைத் தீர்த்து வைத்தது.

கண்ணன் உடனே கன்றுகளாகவும் இடைச் சிறுவர்களாகவும் தன்னைப் பெருக்கிக் கொண்டான். பலராமனால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. வீட்டுக்குச் சென்ற போதும் அவர்களும் வேற்றுமையைத் தெரிந்து கொள்ளவில்லை.

ஒரு நாள் மாலைப் பொழுதில் ஒரு புதுமை நிகழ்ந்தது. கன்றுகளைச் சிறுவர்கள் மேய்ப்பது வழக்கம். பசுக்களைப் பெரியவர்கள் மேய்த்து வந்தனர். அவை அன்று குன்றின் உச்சியில் மேய்ந்து கொண்டிருந்தன. திடீர் என்று இந்த தெய்வீகக் கன்றுகளைப் பார்த்ததும் அதை மேய்ப்பவர்களை மீறிக் கொண்டு கீழே வந்து அக் கன்றுகள் பால் குடிக்க அவற்றைத் தாவி நின்றன; மடிகளில் பால் சுரந்து பெருகியது; இடையர்கள் தடுத்து நிறுத்த இயல வில்லை. - இதற்கு முன்னால் இதுபோன்ற நிகழ்ச்சி நடந்தது இல்லை. பசுக்கள் ஆர்வமுடன் வந்ததில்லை. அதன். தாய்மை முடங்கிக் கிடந்தது. இப்பொழுது மட்டும் ஏன்