பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇35



இவ்வளவு ஆர்வம்! இந்த அன்பின் பிணைப்புக்குக் காரணம் என்ன என்று பலராமனுக்கு விளங்கவில்லை.

இந்தக் கன்றுகளுக்கு இந்தத் தெய்வ சக்தி எப்படி உண்டாகியது? கண்ணனைக் கேட்டுத் தெரிந்து கொள்ள விழைந்தான். இதன் ரகசியம் யாது என்று வினாவினான். இவை போலிகள் என்று கண்ணன் உண்மையைச் சொன் னான். இதற்குள் ஒரு வருஷம் ஒடிப் போய்விட்டது. இனிமேல் நீட்டித்தால் கண்ணனின் சினத்துக்கு ஆளாக வேண்டும் என்று அஞ்சி மறைத்து வைத்த கன்றுகளையும் இடையர்களையும் பிரமன் விடுவித்தான்; தன் மாற்று வடிவமான உண்மைக் கன்றுகளும் ஆயர் சிறுவர்களும் எந்தப் புதிய நினைவுகளும் இல்லாமல் சர்வ சாதாரணமாக இவர்களோடு கலந்து வீடு வந்து சேர்ந்தனர்.

பிரமன் இறைவனைச் சோதித்ததற்காக வருத்தம் தெரிவித்தான். கண்ணனின் பேராற்றலைத் தான் அறிந்து கொள்வதற்காகச் செய்த செயல் என்று கூறினான்.

கழுதை வடிவில் வந்த அசுரன் தேனுகன்)

பனங்காடு ஒன்று இருந்தது; அங்கு எவரும் போவதில்லை; அங்கு ஒரு பொல்லாத அசுரக் கழுதை இருந்தது. பனம் பழம் பறிக்கச் சென்றால் மரத்தின் அருகில் போக முடியாதபடி உதைத்துத் தள்ளியது. ஆயர் சிறுவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பனம் பழத்தின் வாசனை மிகவும் கவர்ந்தது. அவற்றைப் பறித்து உண்ண விரும்பினர்.

கண்ணனிடம் தம் விருப்பத்தைத் தெரிவித்தனர். அவன் துணிந்து தன் தோழர்களை அழைத்துக் கொண்டு பனங்காட்டுக்குச் சென்றான். கழுதை வடிவில் இருந்த தேனுகாசுரன் என்பவன் வேகமாக உதைக்க வந்தான். அவன் பதைத்துத் துடிக்கும்படி தூக்கி எறிந்தான். கழுதை