பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 ◇ ராசீ


கண்ணனைகக் கொல்ல வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. பலராமனையாவது முடித்துவிடலாம் என்று உறுதி கொண்டான்.

அவனை மற்றவர் காணாதபடி நெடுந்துரம் தூக்கிச் சென்று விட்டான். பலராமனுக்குத் தெரிந்துவிட்டது அவன் ஒரு அசுரன் என்று. அவனைக் கீழே கவிழ்த்துப் போட்டு மோதி அவனைக் கொன்று முடித்தான். கண்ணன் அதில் ஈடுபடாமல் பலராமனின் திறமையை நம்பி விட்டு விட்டான்.

கோபியர் சேலைகளைக் கவர்தல்

ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர்; முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் வழக்கப்படி சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர். கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மரத்தின்மேல் ஏறிக்கொண்டான்; சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான், பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, அவ்வாடைகளைத் திருப்பித் தந்தான்.

பந்தவிலோசனத்து அடிசில் உண்டது

கண்ணனும் பலராமனும் கன்றுகளுடனும் இடையர்களோடும் யமுனைக் கரையில் நெடுநேரம் தங்கிவிட்டனர். கண்ணன் திரிந்து களைத்து ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தான். அப்போது இடையச் சிறுவர் தமக்குப் பசிப்பதாகவும், உணவு அருள வேண்டும் என்றும் கேட்டனர். அவர்களை நோக்கி அடுத்துப் பந்தவிலோசனம் என்ற ஊரில் பிராமணர் வேள்வி நடத்துவதாகவும், அங்கே போய்த் தம் பெயரைக் கூறினால் பசிக்குச் சோறு