பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 & ராசீ "கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ மருப்புஒசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே" என்ற ஆண்டாள் திருப்பாசுரம் அவன் வாய்ச்சுவையின் இனிமையைப் பாடுகிறது. இது நம் நெஞ்சைத் தொடுவ தாகும். இதே போன்று ஆய்ச்சியர் அவன் குழல் இசைக்கு மயங்கி நின்றனர். கண்ணன் மயில் தோகை இறகுகளைத் தலைச் சுட்டியில் செருகி இருந்தான். மஞ்சள் நிற ஆடை அவனுக்குத் தனி அழகைத் தந்தது. அந்தக் கோவர்த்தன கிரியே அவன் குழல் இசையால் எதிரொலித்தது. அவர்கள் மாடு மேய்க்க வந்தார்களா? இசை நிகழ்ச்சி நடத்துகிறார்களா? என்று தெரியாமல் அவர்கள் இனிமையாக அங்குப் பொழுதுபோக்கினர். குரவை நிகழ்ச்சி கோபியர் இளம்பெண்கள் ஒவ்வொருவரும் கண்ணனையே கணவனாய் அடைய விரும்பினர்; அவனையே கனவிலும் நினைத்தவராய் வாழ்ந்தனர்; அந்தக் கனவுகளை நாச்சியார் திருமொழி நன்கு நவில்கிறது. அவற்றுள் சில பாடல்கள் இவை; "வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றுஎதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழிநான்" “நாளை வதுவை மணமென்று நாளிட்டுப் பாளைக் கமுகு பரிகடைப் பந்தற்கீழ் கோள்அரி மாதவன் கோவிந்தன் என்பான்ஒர் காளை புகுதக் கனாக்கண்டேன் தோழிநான்"