பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 ◇ ராசீ



எருது வடிவில் அரிஷ்டாசுரன்

அரிஷ்டாசுரன் என்ற அசுரன் எருது வடிவில் ஆயர் பாடியில் புகுந்தான்; இடிபோன்ற குரல் எழுப்பினான்; அடி எடுத்து வைப்பது பூமியை அதிரச் செய்தது; பசுக்கள் எல்லாம் நடுந்டுங்கி ஓடின; மற்றைய எருதுகளும் தாக்குதலுக்கு ஆற்ற முடியாமல் அலறின மக்கள் உயிருக்கு அஞ்சினர்.

கண்ணனிடம் ஆயர்பாடி மக்கள் முறையிட்டனர். கண்ணன் அதன் கொம்புகளை இறுகப் பிடித்துக் கொண்டு போராடி அடக்கினான். அது களைத்துவிட்டது. அதனை ஓங்கி ஓர் உதைவிட்டான். அது கீழே சாய்ந்து இறந்தது.

நாரதர் வருகை

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நாரதர் கம்சனின் சாவினைத் துரிதப்படுத்துதற்காக அவனிடம் சென்றார். அவனுக்குக் கண்ணன்தான் தேவகியின் எட்டாவது மகன் என்பதைத் தெளிவு படுத்தினார். குழந்தை மாற்றப்பட்ட செய்தியையும் உடன் சொல்லினார். உடனே அவனுக்குத் தன்னை ஏமாற்றிய தேவகி வசுதேவர்கள் மேல் கோபம் உண்டாகியது. வாள்கொண்டு அவரை வெட்ட முற்பட்டான்.

நாரதர் தடுத்து நிறுத்தினார். "பலராமனையும் கண்ணனையும் கொல்வதை விட்டு விட்டுத் தேவை இல்லாமல் இந்த முதியவர்களைக் கொல்வதால் பயன் இல்லை; விட்டுவிடு" என்றார். அவர்கள் இருவரையும் தாளில் விலங்கிட்டுச் சிறையில் தள்ளினான். கேசிகன் என்ற அசுரனை அழைப்பித்து அவனை உடனே ஆயர்பாடிக்குச் சென்று கண்ணனைக் கொன்று வரும்படி ஆணையிட்டான். மற்றும் யானைப் பாகனைக் கூப்பிட்டு அனுப்பினான். "கண்ணனும் பலராமனும் வருவார்கள்.