பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇ 51


விளையாட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். இந்த விளையாட்டைப் பயன்படுத்திக் கொண்டு வியோமாசூரன் என்பவன் சிறுவர்களையும் கன்றுகளையும் மலைக் குகைகளில் ஒளித்து வைக்கத் தொடங்கினான். கண்ணன் அவன் செயல்களைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டு வந்தான் கையும் களவுமாகப் பிடித்து அவனை நன்கு புடைத்து அவன் வாழ்நாளையும் துடைத்தான். பின்பு கன்றுகளையும் தன் தோழர்களையும் விடுவித்துக்கொண்டு அன்று மாலை வீடு வந்து சேர்ந்தான். ஒரே நாளில் இரண்டு விருந்து கண்ணன் கைகளுக்குக் கிடைத்தன.

நாரதர் வருகை

அதன்பின் நாரதர் கண்ணனை வந்து சந்தித்தார். கம்சனுடைய திட்டங்களைக் கண்ணனுக்கு எடுத்துச் சொல்லி அவனுக்காக வில் விழா ஏற்பாடு செய்திருப்பதையும், குவலயானத்தம் என்னும் யானையையும் சானுரன் முஷ்டிகள் முதலான வீரர்களையும் ஏற்படுத்தி இவர்கள் இருவரையும் மற்போருக்கு அழைக்கப் போவதையும் அவர்களையும் மீறிச் சென்றால் கம்சனே இவர்களைக் கொல்லப் போவதாகவும் அவன் திட்டம் வகுத்திருப்பதை விரித்துக் கூறினார்.

அக்குருவர் பயணம்

அக்குருவர் திருமாலிடம் பக்தியும் வழிபாடும் மிக்கவர்; இந்தப் பணியால் கண்ணனைத் தரிசிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்று பெருமகிழ்வு கொண்டார்.

அக்குருவர் பிருந்தாவனத்தில் வந்தபோது கண்ணனும் பலராமனும் தொழுவத்தில் பசுக்களைப் பால் கறப்பதை நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். மஞ்சள் நிறப் பொன்னாடையில் கண்ணனும் நீல நிற ஆடையில் பலராமனும் காணப்பட்டனர். அவரை இருவரும்