பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇ 55


தன் இல்லத்துக்கு வரும்படி கண்ணனை அழைத்தாள். கண்ணன் பலராமனைப் பார்த்துச் சிரித்தான். அந்தப் பாவை தன்மீது காதல் கொண்டதை அறிந்து இந்தச் சிரிப்பு அவனுக்குத் தோன்றியது.

"பிறகு நிதானமாய் வருகிறேன்; அரசனைப் போய்ப் பார்க்க வேண்டும்" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

சிவனுக்கு வழிபாடு நடத்தும் கோயில் தலமும், வில்லும் எங்கே இருக்கின்றன? என்று கேட்டு அறிந்தனர். அந்தப் பெரிய வில்லை எடுத்துக் கண்ணன் நாண் ஏற்றினான். அது முறிந்துவிட்டது. அது எழுப்பிய பேரொலி நகர் எங்கும் கேட்டது. கண்ணன் வந்துவிட்டான் என்பதைக் கம்சன் அறிந்தான்; மற்போர் வீரர்கள் சானுரன், முட்டிகன் இருவரையும் விளித்துக் கண்ணன் பலராமன் ஆகிய இருவரையும் தவறாமல் கொன்று முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். பரிசு தருவதாய்ப் பகர்ந்தான்.

மற்போரைக் காண ஊர் மக்கள் திரண்டனர். அரசு அவையின் வாயிலில் நுழையும்போது பாகர்கள் மதம் பிடித்த குவலயானந்தம் என்ற யானையை ஏவி விட்டனர். சிங்கம்போல் இருவரும் சீறிப் பாய்ந்தனர். பலராமன் அதன் கொம்புகளில் ஒன்றை முறித்தான். கண்ணன் மற்றொன்றைப் பிடுங்கி அதைக் கொண்டே அதைக் குத்தி ரணகாயம் ஆக்கிக் கதற வைத்துக் கீழே சாய்த்தான். அதன் குருதி அவர்கள் அணிந்த ஆடைகளை நிறம் மாற்றியது.

பின் மற்போர் நடக்கும் மேடைக்கு வந்தனர். சானுரன் கண்ணனோடு மற்போர் செய்தான். கூடி இருந்தவர் அனைவரும் "இது கொடியது; வயது குறைந்த