பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇ 57


தாய் தந்தையரை வணங்குதல்

கண்ணன் இயன்றவரை கம்சனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டுத் தன் தாய் தந்தையரைக் காணச் சென்றான்; அவர்கள் உடனே விடுதலை செய்யப்பட்டனர். உக்கிரசேனனும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான்; தன் பாட்டனை அரசனாக்கிவிட்டுத் தம் பெற்றோரைச் சந்தித்து அவர்களை வணங்கி ஆறுதல் கூறினான்; கண்ணன் தமக்கு மகனாயினும் தம்முடைய மகன் என்ற உரிமை கொள்ளவில்லை. அவன் தெய்வத்தன்மை நிறைந்தவன் என்பதால் அவனிடம் பக்தியும் மதிப்பும் வைத்துச் சற்று ஒதுங்கியே பழகினர்.

குருவுக்கு அவன் மகனை மீட்டுத் தருதல்

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் நாள்கள் ஆறுபத்து நான்கில் கண்ணனும், பலராமனும் கற்றுத் தேர்ந்தனர். கண்ணன் சகலகலாவல்லவன் என்று பாராட்டப்பட்டான்.

சாந்தீபன் என்ற அந்தண ஆசிரியர் ஒருவரிடம் வேதங்களைப் பயின்றான்; சாத்திரங்கள் பல கற்றான்; அவர் முன்னிலையில் உபநயனமும் நடந்து முடிந்தது. அவ்வாசிரியருக்குக் கண்ணனின் அதீதநிலை தெரிந்தது; கண்ணன் இறைவனின் பிறவி என்பதை அறிந்தார்; இறந்த தம் மகனை உயிரோடு மீட்டுத் தருமாறு குரு காணிக்கையாகக் கேட்டார்.

கண்ணன் மறுப்புச் சொல்லவில்லை. அவனைக் கடலில் இழுத்துச் சென்றவன் பாஞ்சசநன் என்ற அசுரன்; அவன் கடலைத் தன் இருப்பிடமாகக் கொண்டிருந்தான்; சங்கின் வடிவம் தாங்கி இருந்தான். கடலுள் மூழ்கி அவ்வசுரனை விசாரித்தான்; செத்தவன் யம பட்டணத்தில்