பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62◇ ராசீ



"நான் நிம்மதியாக உறங்க வேண்டும்; யாரும் என்னை எழுப்பக் கூடாது; எழுப்பினால், எழுப்பியவர் எரிந்து சாம்பலாக வேண்டும்" என்று தான் அலுத்து விட்ட நிலையில் தன் சோர்வு முழுவதும் நீக்குதற்காகக் கேட்டான். - "அவ்வாறே ஆகுக" என்று வரம் தந்தனர். காலயவனன் இறந்த பின்பு கண்ணன் முசுகுந்தன் முன்பு தோன்றினான்; தான் யார் என்பதை அவனிடம் கூறினான். முசுகுந்தன் கண்ணன் திருமால் என்பதை அறிந்து அவனிடம் அடைக்கலம் அடைந்தான். துறக்க வாழ்வை அடைய வழி தேடினான். "நீ இப்பொழுது தவம் செய்து, நீ செய்துள்ள பல கொலைகளின் பாவங்களைப் போக்கிக் கொள்வாய்; அடுத்த) பிறவியில் உத்தமனாக வாழ்வாய்; பாவம் எதுவும் அணுகாது. அதனால் நீ அந்தப் பிறப்பில் மோட்சத்தை அடைவாய்" என்று கூறினான். கண்ணன் கூறிய வார்த்தையைக் கேட்டுக் குகையை விட்டு வெளியே வந்து நாராயணன் எழுந்தருளியுள்ள கந்தமாதன பருவதத்துக்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினான். பலதேவன் கோகுலம் போதல் போர் எதுவும் தொடரவில்லை; பலதேவனுக்குப் பழைய உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. கண்ணனிடம் சொல்லிவிட்டு அவன் மட்டும் பிருந்தாவனமாகிய ஆயர்பாடியை அடைந்தான். சிறுவர்கள் எல்லாம் தக்க வயது உடைய வாலிபர் களாகிவிட்டனர். சிறுமியர் பெருமை உடையவர் ஆயினர்.