பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ) ராசீ "எங்களோடு அவன் சேர்ந்து பாடிய அந்த இனிய நாட்களை என்றைக்காவது நினைத்துப் பார்த்துக் கொள்கிறானா", "நாங்கள் இல்லாமல் அவனுக்கு எப்படிப் பொழுது போகிறதோ தெரியவில்லை; அங்கேயும் அவனுக்கு அழகிகள் சிலர் கிடைக்காமலா போவார்கள்?" "நாம் படும் துன்பம் அவனுக்கு எப்படித் தெரியப் போகிறது? அவனில்லாமல் இங்கே பொழுதே போக வில்லை என்பதை யார் எடுத்துச் சொல்லப் போகிறார்கள்?" "அப்பா, அம்மா, கூடப்பிறந்த சுற்றம், பந்துக்கள், நண்பர்கள் இவர்களை எல்லாம் விட்டுப் பிரிந்தவனின் நெஞ்சு கல்லாகத்தான் இருக்க வேண்டும். அவன் எங்களைப் பற்றி ஏன் நினைக்கப் போகிறான்?" "கடல் அலைகளில் அவன் காற்று வாங்கிக் கொண்டு க்கலாம்; அவன் பிறவிக்குணம்". ரு 9ئےlgi/ றவககு "இந்தக் கோவர்த்தன மலையும், யமுனை நதியும் அவன் எங்குப் போனாலும் பார்க்க முடியாது; இதைப் போய் அவனிடம் சொல்". "தயிர் கடையும் மத்தொலியும் கன்றின் கனைப்பும், பசுவின் குரலும், அதன் கழுத்தில் கட்டிய மணியொலியும் அவன் காசிக்குப் போனாலும் கேட்க முடியாது". "எங்கள் வளையல் ஒலிகள் அவன் குழலிசைக்கு ஈடுகொடுத்தன. அந்தச் சின்ன ஒலிகளை அக்கன்னல் மொழியான் எங்கே கேட்கப் போகிறான்". 'மயில் இறகும், பூவும் இங்கே சூட்டிக்கொள்ள அவனுக்குக் கிடைத்தன. இன்று தலையில் பொன் முடி