பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66◇ ராசீ



அநியாயங்களை அடுக்கடுக்காகச் செய்து வருகிறார்கள். தட்டிக்கேட்க ஆள் இல்லாமையால் இந்நிலத்தையே நடுங்க வைக்கிறார்கள். வீரன் ஒருவனுக்கு நாட்டைக் காப்பதும், நன்மை செய்வதும் கடமை அல்லவா? அதனால்தான் அவன் அங்கு இருக்கிறான்." 'உங்களைப்பற்றிப் பேசாத நாளே இல்லை; உறக்கத்தில் கூட "இராதை" என்ற பெயரைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான்; பக்தர்கள் இறைவன் திருநாமங்களைச் சொல்வது போல அவன் உங்கள் பெயர் களைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான். நொண்டிக் கன்றுக்குட்டி ஒன்று இருந்ததே அது எப்படி இருக்கிறது: என்று விசாரித்துவரச் சொன்னான்" என்று கண்ணன் அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த அக்கரையை எடுத்துக் கூறினான். - இராதை கோகுலத்திலேயே தங்கி விட்டாள்; அவள் கனவுகள் மீராபாய்ப் பாடலிலும்; ஆண்டாள் மொழியிலும் இன்றும் நிலைத்துவிட்டன. அவளைப் பற்றி மீண்டும் பேசப்படவே இல்லை; கண்ணன் நினைவிலேயே அவள் வாழ்ந்து முடித்தாள். நகருக்குச் சென்றதும் அவளை முற்றிலும் மறந்துவிட்டான்; அவளை மணக்கவே இல்லை. விசாரணைகள் முடிந்ததும் பிறகு கலகலப்பாகப் பழக ஆரம்பித்தனர். தொடர்ந்து இரண்டு திங்கள். அங்குத் தங்கி அவர்களோடு ஒன்றி வாழ்ந்தான். பிருந்தாவனத்தில் ஆடியும் பாடியும் மகிழ்ச்சியோடு காலம் கடத்தினான். தெய்வ உலகத்தில் இவன் ஆதிசேடனாய் இருந்ததால் இவன் நண்பன் வருணன் தன்மகள் வாருணி தேவியை அழைத்து, "நீ ஆதிசேடனுக்கு மிகவும் பிரியமானவள்;