பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇67



ஆதலால், நீ அவன் இருக்குமிடத்திற்குச் சென்று அவனுக்கு இன்பம் சேர்ப்பாயாக" என்று கூறினான். அவள் மதுவடிவில் வந்து அவனுக்குப் பருகத் தன்னைத் தந்தாள். பிருந்தாவனத்தில் ஒரு கடப்ப மரத்தின் பொந்தில் இம் மது அவனுக்குக் குடிக்கக் கிடைத்தது. மதுவின் வாசனை அக்கடம்ப மரத்தில் வருவதைக் கண்டு குடிக்க வேண்டும் என்ற வேட்கை மீதுார்ந்ததால் அங்கே அதனை வேண்டிய அளவு வாரிக் குடித்தான். தன்னோடு இருந்த கோபாலர்களுக்கும், கோபியர்களுக்கும் பகிர்ந்து அளித்தான். குடி மயக்கத்தில் மயங்கிக் கிடந்தான். குடித்ததால் மதம்மிக்கு வியர்வை நீர் முத்துமுத்தாய் அரும்ப, அருகில் ஒடிக் கொண்டிருந்த யமுனை நதியை நோக்கி, "யமுனை நதியே! நீ இங்கே வா; நீராட வேண்டும்" என்று அழைக்க, "இவன் குடி மயக்கத்தில் பிதற்றுகிறான்" என்று கருதி இவன் ஆணையை நதி மதிக்கவில்லை. பலராமனுக்கு அதனால் கோபம் வந்தது. தன் கலப்பையைக் கொண்டு அதனைத் தன்பக்கம் இழுத்தான். அதன் ஒட்டம் தடைப்பட்டது; அவன் இழுத்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. தன்னை விடுவிக்கும்படி நதி வேண்டிக் கொண்டது. "நினைத்தால் உன்னைச் சுக்கு நூறாகச் சிதைத்து விடுவேன்" என்று அச்சுறுத்தி அதட்டினான். அந்த மகாநதி பிருந்தாவனத்தில் இருந்த நிலமும் வனமும் பாய்ந்து வளப்படுத்தியது. பின் அதனைப் பழைய போக்கில் செல்லப் பலராமன் அனுமதித்தான். அந்த யமுனை நீர் தன்னருகில் வந்ததும் அதில் அவன் நீராடினான். அவன் மேனி புத்தொளி பெற்றது. அவனுக்குத் திருமுடியில் அணியத்தக்க ஒரு தாமரைப் பூவும், காதில் அணியத்தக்க குண்டலங்களும் திருமகள்