பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை 71



பேசாமல் கருதிய காதலனோடு கடிமனை கடந்து செல்லுதல் காதலர் நெறி என்பதனை அறிந்தவள்.

படித்தவள்; அதனால், ஒலை எடுத்து அதனை எழுத்தால் நிரப்பினாள்; அதில் தன் காதல் முத்திரையைப் பதித்தாள்.

அவள் என்ன எழுதினாள் என்று முழுதும் படிக்கவில்லை. "அன்பே !" என்று தொடங்கிய சொல்லையும் "வரவும்” என்ற முடிவையும் மட்டும் படித்தான்; கண்ணன் உடனே சாரதியைக் கூப்பிட்டான்; “பூட்டுக தேர்” என்றான். "ஓட்டுக விதர்ப்ப நாட்டுக்கு" என்றான்.

மணநாளுக்கு முந்திய தினம்; அவள் துர்க்கை கோயிலுக்கு வழிபடச் செல்வதாகக் கூறி மணக்கோலத்தில் மஞ்சள் பூசி, மலர்மாலை எடுத்துக்கொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள்.

மாப்பிள்ளை சிசுபாலன், தன் நண்பர்களோடு அடுத்த நாள் எப்பொழுது வருவான் என்று காத்துக் கிடந்தனர். சராசந்தன் முதலிய நண்பர்களும் மாமன்னர்களும் முன்கூட்டி வந்திருந்தனர். சுயம்வரச் செய்தி வரும் என்று ஏனைய மன்னர்களும் காத்திருந்தனர்; அவள் அதை முன்கூட்டியே செய்து முடித்து விட்டாள் என்ற செய்தி எட்டியது. கண்ணன் தேரில் வந்து அழைத்துச் சென்று விட்டதாகச் செய்தி வந்தது. உடனே சிசுபாலனும், சராசந்தனும், அவன் நண்பர்களும் தத்தம் சேனைகளோடு பின் தொடர்ந்தனர்.

வெள்ளம் வரும் என்று தக்க அணை போட்டிருந் தான் கண்ணன்; பலராமனைச் சேனைகளோடு நிறுத்தி வைத்திருந்தான்; அவன் அவர்களைத் தடுத்து நிறுத்தி முறியடித்துத் திரும்பச் செய்தான். வண்டி புறப்பட்டு