பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇73



கண்ணனை உரித்து வைத்தது போலப் பேரழகையுடையவனாய் இருந்தான்.

சம்பராசுரன் வதம்

பிரத்தியும்னன் பிறந்த ஆறாம் நாளிலேயே சம்பரன் என்னும் அசுரன் "இவன் நம்மைக் கொல்லப் பிறந்தவன்" என்று நினைத்து அவனைக் கரு உயிர்த்த அறையில் இருந்து பிறந்த ஆறாம் நாளே தூக்கிக் கொண்டு போய்விட்டான். அவனைத் தன் கையால் கொல்ல மனம் இன்றி 'லவண சமுத்திரம்' என்ற கடற்பகுதியில் எறிந்துவிட்டான். அக்குழந்தையைக் கடலில் இருந்த ஒரு மீன் விழுங்கியது.

கண்ணனின் வீரியத்தினால் பிறந்ததால் அது மீன் வயிற்றில் செரிக்கப்படவில்லை. உயிரோடு இருந்தது. மீனவர் பல மீன்களோடு அந்த மீனையும் பிடித்துச் சென்று அதனைத் தம் அசரனான சம்பரனுக்குக் கொடுத்தனர்.

அந்த அசுரனுக்குப் பெயரளவில் பத்தினியாக மாயாவதி என்ற பேரழகி இருந்தாள்; அவள் சமையற்காரருக்கெல்லாம் அதிபதியாக இருந்தாள். சம்பரன் அவளை மணம் செய்துகொண்டு இன்பம் அடைய விரும்பினான். அவள் தன் சாகசத்தால் அவனை மயக்கி வந்தாள். அவனுக்கு இசைபவளைப்போல நடித்து அவனை ஏமாற்றி வந்தாள்.

வீட்டுவேலை செய்துவரும் பணி அவளிடம் தரப்பட்டது. அந்த மீனை அறுக்கும்போது வயிற்றில் அழகான குழந்தை உயிரோடு இருந்தது. அது மன்மதனை நிகர்த்தது. "இந்த அழகிய குழந்தை எப்படி இங்கே இந்த மீன் வயிற்றுக்கு வந்தது?" என்று சிந்தித்துக்கொண்டு இருந்தாள். நாரத முனிவர் வந்து, "இந்தக் குழந்தை கண்ணனின் திருக்குழந்தை; சம்பரன் எடுத்துவந்து கடலில் போட்டு