பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பலராமனும் கண்ணனோடு வந்திருந்தான். உருக்குமியின் நெருங்கிய நண்பனான கலிங்க தேசத்து அரசன் தந்தவக்கிரனும் வந்திருந்தான்.

விழாவிற்கு வந்தவர்கள் விவாகம் முடிந்ததும் ஒய்வு எடுத்துக்கொண்டு கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். கலிங்க அரசனான தந்தவக்கிரன் என்பவன் சும்மா இராமல் உருக்குமியைத் தூண்டிவிட்டான்.

“பலராமனுக்குச் சூது ஆடத் தெரியாது; நீ அவனை எளிதில் வென்று விடலாம்” என்று ஏளனமாய்ப் பேசினான்.

உருக்குமியும் அவனைச் சூதாடத் தெரியாது என்று கூறினான்; நெஞ்சில் உறுதி இருந்தால் தன்னுடன் தாயம் உருட்டி விளையாடலாம் என்று கூறினான். அவனும் அழைப்பை மானப் பிரச்சினையாய் எடுத்துக் கொண்டான் உருக்குமி பலராமன் இருவரும் தாயப் பலகையை வைத்துக் காயை உருட்டினர்.

முதல் ஆட்டத்தில் பலராமன் பந்தயமாய் வைத்த ஆயிரம் வராகனையும் உருக்குமி வெற்றி கொண்டான். அடுத்து மற்றோர் ஆயிரம் வராகனையும் பலராமன் இழந்தான்; தொடர்ந்து ஆடிய ஆட்டத்திலும் வராகனை அவன் வெற்றி கொண்டான். மும்முறையும் தோற்ற பிறகு அவன் அமைதியாய் இருந்து விட்டான். தோல்வியைக் கம்பீரமாக எடுத்துக் கொண்டான். அவனுக்கு அந்தப் பணம் பெரிதாகப்படவில்லை. அவனை வம்புக்கு இழுத்து அவமானப்பட வைக்க வேண்டும் என்ற நோக்கமே அவர்களுக்குப் பெரிதாய் இருந்தது. "கேடுவரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே" என்பதற்கு ஏற்ப அவன் நடந்து