பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇77



கொண்டான். பலராமன் பந்தயம் வைக்க அஞ்சுவதாய்க் நத ஞசுவத குத்திக் காட்டினான். - ஒருகோடி வராகன் பந்தயம் என்று சொல்லி ஆட்டத் திற்கு உருக்குமியை அழைத்தான். அவன் ஒன்றும் பேசாமல் ஆட்டத்தில் அமர்ந்தான்; காய் பலராமனுக்குப் பழத்தைத் தந்தது; வெற்றி அவன் பக்கம் சாய்ந்தது. எதிரி தோல்வியை ஒப்புக்கொண்டு அந்தத் தொகையைக் கொடுத்திருக்க வேண்டும். வாக்கினால் வென்று விடலாம் என்று நினைத்துச் சட்டம் பேசினான். "ஆட உட்கார்ந்தது உண்மைதான்; ஆனால் ஒட்டிய தொகைக்கு யான் இசைவு தரவில்லை; அதனால், அந்தத் தொகை தரமுடியாது” என்று சாதித்தான். பலராமன் விடுவதாக இல்லை. பெரியவர்கள் சிலரை வைத்துப் பஞ்சாயத்துப் பேசிப் பார்த்தான். பலராமனே வெற்றி கொண்டதாயும், தொகைக்கு இசைந்து வாயால் சொல்லாவிட்டாலும் ஆட உட்கார்ந்து விட்டதால் ஒப்புக் கொண்டதாகவே முடியும் என்று அபிப்பிராயம் தெரிவித்தனர். அதுவே அசரீரியாய் அங்கே ஒலித்தது. அதற்கு மேலும் ஒப்புக்கொள்ளாமல் எள்ளல் போக்கொடு சிரித்து அவனை ஏய்க்கத் தொடங்கினான்; மேலும், அவன் சினத்தைத் துண்டிவிட்டான். பக்கத்தில் இருந்த தாயப்பலகை கொண்டே பலராமன் அவன் தலையில் தட்டி அவனைக் கொன்றுவிட்டான்; அவனைத் துண்டி விட்டுச் சிரித்துக் கொண்டிருந்த தந்தவக்கிரனைப் பற்கள் உதிரும்படி தாக்கி, அவன் கர்வத்தை அழித்தான். உருக்குமியின் சார்பில் வந்து எதிர்த்த நண்பர்களை