பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇79



வந்தவன் தமக்குப் பழக்கமான சத்திரஜித்து என்பதையும், அந்த மணியைச் சூரியன் அவனுக்குக் கொடுத்தான் என்பதையும் விளக்கினான் கண்ணன்; அவனைப் பார்த்து விட்டுத் திரும்பிச் சென்ற சந்திரஜித்து, அதைத் தன் மாளிகையில் வைத்துக் கொண்டான். அந்த மணி நாள் ஒன்றுக்கு எட்டுப்பாரம் அளவு பொன்னை உண்டாக்கித் தந்தது. மேலும், அந்த மணி இருக்கும் சுற்று வட்டாரத்தில் மக்களுக்கு நோய், மழையின்மை, பாம்பு, நெருப்பு முதலியவற்றால் தீமைகள் அணுகவில்லை. அதன் பெருமையைக் கண்ணன் சத்திரஜித்துக்கு உரைத்தான். "இது புதையல்போல் உமக்குக் கிடைத்துள்ளது; இது தனி மனிதனுக்கு உரியது அன்று; அரசனிடத்தில் சேர்த்து விடு; அதுதான் குடிமக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமையும் தர்மமும் ஆகும்" என்று கண்ணனைச் சந்தித்த போது விளக்கினான். அவனுக்கு அதை அரசனிடம் ஒப்புவிக்க மனம் வரவில்லை; அதைத் தானே வைத்துக் கொள்ள விரும்பினான். அதே சமயத்தில் அதைக் கண்ணன் பார்த்துவிட்ட தால் அதைத் தனக்கு என்று கவர்ந்து கொள்வானோ என்ற அச்சம் உண்டாகியது. அதைப் பத்திரப்படுத்துவதற்காக வீட்டுள் கொண்டுபோய்ப் பத்திரப்படுத்தினான். அவனுக்குத் தம்பி ஒருவன் இருந்தான். அவன் பெயர் பிரசேனன் என்பது. அவனுக்கு அந்த மணியைத் தன் கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஓர் ஆசை தோன்றியது. அது தக்கவர் அல்லாதவர் போட்டுக் கொண்டால் அஃது அவரைத் துக்கத்தில் ஆழ்த்தி விடும். "ஒளிபடைத்த மணியினாய் வாவா" என்று தன்னை வரவேற்பர் என்று கருதித் தன் தமையனுக்குத் தெரியாமல் அதனைத் தன் கழுத்தில் அணிந்துகொண்டு