பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80◇ ராசீ



பெருமையோடு திரிந்தான். அதற்கு வேண்டிய நற்குணங்கள் அவனிடம் இல்லை. தீயவன் அணிந்து கொண்டதால் அவனை உயர்த்துதற்கு மாறாய் அது தாழ்த்தியது; அழிவைத் தந்தது. - அவன் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்றிருந்தான். குதிரைமீது ஏறிக்கொண்டு போனான்; கழுத்தில் அந்த மணியை அணிந்துகொண்டிருந்தான்; அந்த மணி அவனுக்கு உதவவில்லை; அழிவைத் தந்தது; ஒரு சிங்கம் அவனையும் அவன் ஏறிவந்த குதிரையையும் அடித்துக் கொன்று விட்டது. அந்தச் சிங்கம் அந்த ஒளிவீசிய மணியைத் தன் வாயினால் கவ்விக்கொண்டு தன் குகையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வழியில் கரடி வேந்தனாகிய ஜாம்பவான் அச்சிங்கத்தைக் கொன்று அம்மணியைத் தன் குகைக்கு எடுத்துச் சென்றான். தன்மகன் சுகுமாரன் வைத்துக்கொண்டு விளையாட அவனிடம் கொடுத்தான். மணியைக் கொண்டு சென்ற தம்பி பிரசேனன் வீடு திரும்பி வரவில்லை. அதனால், கண்ணன்தான் இந்த இரத்தினத்துக்கு ஆசைப்பட்டு அவனைக் கொன்று விட்டான் என்று காதோடு காது வைத்தாற்போல் நகரத்து யாதவர் பேசிக் கொண்டனர். தனக்கு இந்த வீண்பழி நேர்ந்ததை அறிந்த கண்ணன், சகல யாதவ சேனைகளோடு யாதவக் குடிமக்கள் பலரையும் அழைத்துக்கொண்டு குதிரை சென்ற வழியைத் தொடர்ந்து சென்றான். அங்கே சிங்கத்தால் கொல்லப்பட்ட குதிரையும் பிரசேனனும் தரையில் விழுந்து கிடப்பதை அனைவரும் கண்டனர். அதைத் தொடர்ந்து சிங்கத்தின் காலடிகளையும், அதன் நகக்குறி முதலியவைகளையும் பார்த்தவுடன் நகரத்தவர் உண்மை அறிந்தனர்; கண்ணன்மீது கொண்டிருந்த ஐயம் நீங்கியது.