பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇85



அக்குருவரிடம் ஒப்புவித்துவிட்டுச் சென்றான். “நான் உயிரோடு திரும்பி வருவேன்; அப்பொழுது என்னிடம் திருப்பிக் கொடு" என்று சொல்லிவிட்டுக் குதிரையில் ஏறி வேகமாகச் சென்றான். கண்ணனும் பலராமனும் தேர் ஒன்றில் ஏறி அவனைப் பின்தொடர்ந்தனர். வழியில் அவன் ஏறிவந்த குதிரை இறந்துபோயிற்று. ஆனால், சத்தனுவன் கால் நடையாக அப்புறம் ஒடத் தலைப்பட்டான். தானும் கால் நடையாய் ஓடிச் சென்று அவனைக்கண்டு பிடித்துக் கொன்றுவிட்டு அந்தச் சியாமந்தகமணியைக் கொண்டு வருவதாகக் கண்ணன் கூறிச்சென்றான். குதிரைகளையும் தேரையும் பலராமனை அங்கிருந்து பார்த்துக் கொள்ளச் சொல்லிட்டுப் போனான்.

தான் ஒருவனாகவே தொடர்ந்து அவனைக் கண்டு தூரத்தில் இருந்தே தன் சக்கரப்படையை ஏவி அவன் கழுத்தைச் சீவினான்; உதிரம் பாயக் கீழே விழுந்தான். அவன் மூடி வைத்திருந்த கைகளைத் திறந்து பார்த்தான். மணி இல்லை. அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்பதை உணர்ந்தான்.

"அவனைக் கொன்றது வீண். அவன் கையில் மணி இல்லை; அவன்தான் சத்திரஜித்தனைக் கொன்றான் என்று உறுதியாகவும் கூற முடியாது. இருவரும் சேர்ந்து ஒரு பாவ காரியத்தைச் செய்துவிட்டோம்" என்று கூறி வருத்தப்பட்டான். பலராமனுக்குத் தம்பி மீது கோபம்; ஏமாந்து மணியைக் கோட்டைவிட்டு விட்டானே என்று சிறிது வருத்தப்பட்டான். அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. தவறுதலாக மணியை எடுத்துக்கொண்டு தன்னிடத்தில் அஃது இல்லை என்று கூறுகின்றானோ என்ற