பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇7


"உலகத்திற்கு நன்மை செய்ய அவதரித்தவன்” என்பதைப் 'பாயன்' என்னும் தொடரால் குறிப்பிடுகின்றார்.

இதோ அந்தப் பாடல்

 வாயுள் வையகம் கண்ட மடநல்லார், 
 "ஆயர் புத்திரன் அல்லன்; அருந்தெய்வம்; 
 மாயச் சீருடைப் பண்புடைப் பாலகன்; 
 பாயன்" என்று மகிழ்ந்தனர் மாதரே
                   -பெரியாழ்வார் திருமொழி 
 இதுவே கண்ணனின் அவதாரப் பெருமையாகும். இக் கதையை இந் நூல் சொல்ல எடுத்துக்கொண்ட முயற்சியே கண்ணனின் திருக்கதை.
                            ரா. சீனிவாசன்