பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88◇ ராசீ



விட்டான். அவரும் அதைப் போற்றிக் காத்து உலக நன்மைக்காகப் பயன்படுத்திப் பிற்காலத்தில் சத்திய பாமையின் வாரிசுகளிடம் சேர்த்துவிடுவது என்று முடிவு செய்தார். கண்ணனின் தொடர்திருமணங்கள் ருக்குமணியே கண்ணன் மனைவியருள் முதன்மை யானவள்; தலைமையானவள்; அதனைத் தொடர்ந்து சம்பாவதியையும் சத்தியபாமையையும் மணந்தான். பின்பு அத்தினாபுரத்தில் இருந்தபோது அர்ச்சுன னோடு காட்டில் வேட்டையாடச் சென்றான்; அப்போது யமுனை நதிக்கரையில் கண்ட அழகிய பெண் காளிந்தி, கண்ணனையே மணம்செய்து கொள்ளக் காத்திருந்தாள். அர்ச்சுனன் அவளைக் கண்டு பேசினான். அவன் நீர் பருக ய்முனைக்குச் சென்றிருந்த நேரத்தில் ஏற்பட்ட சந்திப்பு இது; அவன் மூலமாகக் காளிந்தி தன் காதலைக் கண்ணனுக்குச் சொல்லி அனுப்பினாள், மணம் நடத்த அவளைத் துவாரகைக்கு அழைத்துச் சென்று அங்கு அவளை மணந்துகொண்டான். அடுத்தது அவந்திபுரத்து அரசனின் புதல்வி விந்தை யாவாள். அவள் தமையனின் பெயர் விந்தன் என்பது, அவள் கண்ணனுக்கு அத்தை மகள் என்ற உறவு இருந்தது. கண்ணன் சுயம்வரத்துக்குச் சென்று அவளைத் தேரில் ஏற்றிக் கொண்டு சென்றான். பின் திருமணம் செய்து கொண்டான்.