பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92◇ ராசீ



கண்ணனையே கணவனாக அடையவேண்டும் என்று விரும்பிக் காதலித்தனர். அவர்கள் வேண்டுகோளைப் புறக்கணிக்காமல் அவர்களையும் தன் துணைவியராக ஏற்றுக் கொண்டான். நரகன்வசம் இருந்து யானைகளையும், குதிரைகளையும் துவாரகையில் சேர்ப்பித்தான். வருணனின் குடையையும், ரத்தினமணி பர்வதத்தையும் கண்டு, அவற்றைக் கருடன்மேல் ஏற்றிக்கொண்டு அவற்றை உரிய இடத்தில் சேர்க்கப் புறப்பட்டான். தன்னோடு சத்தியபாமையும் தேவேந்திர உலகத்திற்கு உடன் வந்தாள். பாரிஜாதமலர் கொண்டுவருதல் கருடன் வருணனின் குடையையும் மணிபர்வதத்தின் சிகரத்தையும் அலகில் பற்றிக்கொண்டு கண்ணனையும் சத்தியபாமையையும் ஏற்றிக்கொண்டு விண்ணவர் உலகம் சேர்ந்தனன். அங்கே கண்ணன் தன் திருச்சங்கை ஊத அது கேட்ட அமரர் வந்து திரண்டனர்; கண்ணனைப் பூசை செய்து வரவேற்றனர்; அவன் திருவடிகளில் விழுந்து வணங்கினர். பின்பு கண்ணன் இந்திரன் தாய் அதிதியைச் சந்தித்து அவளுக்கு உரிமையான குண்டலங்களை அவளிடம் சேர்ப்பித்து அவளை மகிழச் செய்தான்; அதிதி அவனைப் பலவாறு சொல்லித் துதித்தாள். அதிதி மேலும் சத்தியபா மையை வாழ்த்தினாள். இந்திரனும் தன் தாயின் கட்டளைப்படி கண்ணனைத் தக்கவகையில் வழிபட்டு உபசரித்தான். - அவன் மனைவி சசிதேவியும் சத்திய பாமையைப் பலபடி உபசரித்துப் போற்றினாள். எனினும் பாரிஜாத மலரைத் தான் சூட்டிக்கொண்டாளே தவிரச்