பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇93



சத்தியபாமைக்குத் தரவில்லை. அவள் மானுடப்பெண் என்பதனால் அவளுக்கு அதைச் சூடிக்கொள்ளத் தகுதி இல்லை என்று புறக்கணித்தாள். கண்ணனோடு தேவலோகத்தைச் சத்தியபாமை சுற்றிப் பார்த்தாள். அங்கே நந்தவனத்தில் பாரிஜாத மலர்கள் பூத்துக் குலுங்கி இருப்பதைப் பார்த்தாள். கணணனைப பாாதது, "என் ஆருயிர்த் தலைவனே! நீ என்னைப் பார்த்து நீ தான் எனக்குப் பிரியமானவள் என்று கூறி இருக்கிறாய்; ஜாம்பவதி யானாலும், ருக்குமணியானாலும் அவர்கள் உன்னைப்போல் எனக்கு இனியவர்கள் அல்லர் என்று கூறியது உண்மையானால் இந்த மலர்ச்செடி என் மாளிகையின் புழைக்கடைத் தோட்டத்தில் கொண்டு போய் வைக்கப்படவேண்டும். இப்பூங் கொத்துகளை என் கூந்தலில் வைத்து அலங்கரித்துக் கொண்டு என் சக்களத்திமார் நடுவில் மிகவும் பொலிவோடு காணப்பட வேண்டும்" என்று கூறினாள். கண்ணனும் அந்த மலர்ச் செடியைப் பெயர்த்துக் கருடன்மீது வைத்தான். அப்போது அந்த நந்தவனத்துக் காவல்காரன் "இஃது இந்திரனின் மனைவி சசிதேவிக்கு உரியது. அமுதம் கடைந்தபோது கிடைத்த இம் மலர்ச்செடி தேவராசனுக்குத் தரப்பட்டது. இதை அவன் தன் துணைவியான சசிதேவிக்குத் தந்துவிட்டான். இது அவளுக்கே உரியது; இதை எடுத்துச் சென்றால் வீன் பகைமை உண்டாகும்; இந்திரனின் சினத்துக்கு ஆளாவாய்' அதனால் அவனோடு போர் செய்ய நேரிடும்;" என்று உரைத்தான். ~